நாடு முழுவதும் 1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் தங்க நாற்கரச் சாலைகளில் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஒரு திரவநிலை இயற்கை எரிவாயு நிலையத்தை அரசு அமைக்கும் என்றார்.
அதேபோல அனைத்து முக்கிய சாலைகள், தொழில்துறை மையங்கள் மற்றும் சுரங்க சாலைகளில் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.