மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்ததனால் தான், மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என, நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி, 5 முறை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டார்.
இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில், காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டதாகவும், உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.