ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் சரக்கு வாகனம் தீப்பிடித்து வெடித்த காட்சி வெளியாகி இருக்கிறது.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோடா சுங்கச் சாவடி அருகே அதிகாலை 5 மணியளவில் சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனையிட்ட போது, அதில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கையெறி குண்டுகளையும் வீசினர்.
3 மணி நேரம் நீடித்த மோதலில், பெரிய தாக்குதல் திட்டத்துடன் வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்ரவாதிகள் 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
காவலர் ஒருவர் காயமடைந்தார். அந்த சரக்கு வாகனத்தில் இருந்து 11 ஏகே 47 துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், 29 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவான சரக்கு வாகன ஓட்டுனரை தேடி வருவதாகவும் ஐஜி தெரிவித்தார்.