மத்தியப் பிரதேசத்தில் ,விபத்தில் காயமடைந்த பெண்ணை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜபல் பூர் நகரில்,மினி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில், பெண்கள் உட்பட 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த நிலையில் காயம் அடைந்தவர்களுக்கு ஸ்டெர்ச்சர் கிடைக்கவில்லை.
இதை அடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சந்தோஷ் சென் காயமடைந்தப் பெண் ஒருவரை தனது முதுகில் சுமந்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார்.