நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு மும்பை போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.
வெவ்வேறு மதத்தினர் இடையே பகையை தூண்டும் வகையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை பாந்த்ராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் சகோதரிகள் இருவரும் ஆஜராகவில்லை.
இந்தநிலையில், கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி 24-ந் தேதியும் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.