அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் பேரம் தொடர்பாக முக்கியக் குற்றவாளியான ராஜீவ் சக்சேனா மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் குர்ஷித் பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது ஊழலில் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
விவிஐபிகளுக்காக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிரான்சின் அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்க பேரம் முடிவானது.
இதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் குர்ஷித், அகமது பட்டேல் , கமல்நாத்தின் உறவினர் ரதுல் புரி உள்ளிட்டோர் மீது முக்கியக் குற்றவாளியான ராஜீவ் சக்சேனா குற்றம் சாட்டியுள்ளார்.
துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட ராஜீவ் சக்சேனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அரசியல் ஆதாயம் பெற்றவர்கள் பெயர்களில் கமல்நாத்தின் மகன் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.