கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர்- லே இடையிலான நெடுஞ்சாலை 5வது நாளாக மூடப்பட்டுள்ளது.
அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நான்காவது நாளாக அந்த சாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் மூடப்பட்டு இருந்தது.
இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. டிராஸ், ஜோஜிலா மணி மார்க் உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவு போன்ற ஆபத்துகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.