தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், ரஷ்யா , இந்தியா, சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி மூலமாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். கொரோனா தடுப்பூசி முதல் தீவிரவாதம் வரை சமகால முக்கியப் பிரச்சினைகள் குறித்து அப்போது அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதத்தை தூண்டி விடும் நாடுகளையும் தீவிரவாதிகளைப் போலவே குற்றவாளிகளாக கருத வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவை சுயசார்புடைய நாடாக்க தமது அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களையும் அப்போது பிரதமர் விவரித்தார். கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா 150 நாடுகளுக்கு அனுப்பி வைக்குமளவுக்கு உற்பத்தித் திறன் மிக்க நாடாக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்..