பைசர் நிறுவனத்தின், தடுப்பூசியை சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான, தேசிய சிறப்பு குழுவின் தலைவர் வி.கே.பால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
அதற்கான அங்கீகாரம் கிடைத்தவுடன், அதை கொள்முதல் செய்யவும், வினியோகம் செய்யவும் வியூகம் வகுக்கப்படும் என்றார். ஆனால், மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் தடுப்பூசியை சேமித்து வைப்பது, மிகச் சவாலானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.