அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியா நடத்தும் மலபார் கடற்போர் ஒத்திகையின் இரண்டாம் கட்டம், வடக்கு அரபிக் கடலில் துவங்கியது.
கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா,அமெரிக்க விமானந்தாங்கியான USS நிமிட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய, ஜப்பான் போர்க்கப்பல்கள், மலபார் 2020 என்ற இந்த போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 4 நாடுகளும் சேர்ந்து முதன்முறையாக இந்த பிரம்மாண்ட ஒத்திகையை நடத்தி வருகின்றன.
குவாட் நாடுகளின் ஒத்திகை என அழைக்கப்படும் இந்த போர் பயிற்சி, லடாக்கில் அத்துமீறும் சீனாவுக்கு விடுக்கப்படும் ஒரு மறைமுக எச்சரிக்கை எனவும் கருதப்படுகிறது.