ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியாக எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பதால் தான் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
மன்மோகன் சிங்கிற்கு தேசிய அளவில் எந்த விதமான அரசியல் பின்புலமும் கிடையாது என்பதும் சோனியாவின் முடிவுக்கு காரணம் என ஒபாமா எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தகுதியானவராக ராகுலை வளர்க்கும் சோனியாவின் திட்டமும் மன்மோகனை தேர்வு செய்த முடிவின் பின்னால் இருந்தது என்பது ஒபாமாவின் கருத்து.
அதே நேரம் இந்தியாவின் மத அரசியலையும் மீறி, பொருளாதார மாற்றங்களுக்கான சிற்பியாக மன்மோகன் இருந்தார் எனவும் ஒபாமா பாராட்டி இருக்கிறார்.