நடிகர் சோனு சூட் பஞ்சாப் மாநில அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜு உறுதி செய்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகா (moga) மாவட்டத்தை சேர்ந்த சோனு சூட், ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளியூர்களில் சிக்கியவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்து உதவினார்.
இதற்காக அவரை பல தரப்பினரும் பாராட்டிய நிலையில், தற்போது இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.