டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரம்பு, 26 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், குறிப்பிட்ட வரம்புக்கு அதிகமான வெளிநாட்டு முதலீட்டை பெற்றுள்ள நிறுவனங்கள், தங்களது பங்குதாரர்கள், இயக்குனர்கள், பங்குதாரர் முறை போன்ற விவரங்களை, அடுத்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்கள் போன்றவை, கடந்த வாரம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.