புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திடம் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால், ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்புகளை சந்தித்துள்ளன.
இதை ஈடுகட்டும் வகையில் 15 முதல் 20 சதவிகிதம் வரை இந்த நிறுவனங்கள் கட்டண உயர்வை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது வரும் ஆண்டின் துவக்கத்திலோ அறிவிக்கும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில், வோடபோன், ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.