பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக அக்டோபரில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், அதற்குப் பிந்தைய மாதங்களில் எரிபொருள் தேவை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. கடந்த சில மாதங்களாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றுள்ளன.
இதனால் அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விற்பனை முந்தைய ஆண்டை விட 4 புள்ளி 3 விழுக்காடும், முந்தைய மாதத்தைவிட 8 புள்ளி 2 விழுக்காடும் அதிகரித்து 26 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக உள்ளது. டீசல் விற்பனை முந்தைய ஆண்டைவிட 7 புள்ளி 4 விழுக்காடும், முந்தைய மாதத்தைவிட 27 விழுக்காடும் அதிகரித்து 69 லட்சத்து 90 ஆயிரம் டன்னாக உள்ளது.
பொதுப் போக்குவரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் எரிபொருள் தேவை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.