தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணையைச், செலுத்து வாகனத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி இந்தியா சோதித்துப் பார்த்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்தச் சோதனையின்போது வான் இலக்கை ஏவுகணை துல்லியமாகத் தாக்கியதாகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ரேடார், மின்கலம் ஆகியன பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் எதிரி நாட்டுப் போர் விமானங்களைத் தாக்கி அழிப்பதற்காக ராணுவத்தில் பயன்பாட்டுக்குச் சேர்க்கப்பட உள்ளது. சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.