ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். கெரன் பிராந்தியத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகளை பிடிக்க முயன்றபோது, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், எல்லை பாதுகாப்பு படையின் எஸ்ஐ ராகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதே போன்று உரி, குரூஸ் பந்திப்பூரா, உள்ளிட்ட இடங்களில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்களும், 6 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
இதற்கான பதில் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டதோடு, 16 பேர் காயமடைந்து உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.