பீகார் சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் மோதல் மூண்டது.
பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் இதில் பார்வையாளராகக் கலந்துகொண்டார். அப்போது கூட்டம் நடந்த அரங்கத்துக்கு வெளியே நின்ற தொண்டர்கள் ஒருவரையொருவர் தள்ளியதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.