பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து வரும் ஞாயிறு பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
தேர்தலுக்கு முன்பே நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணியில் அதிக இடங்களை பெற்றுள்ள நிலையில், புதிய முதலமைச்சர் யார் என ஆலோசனை நடத்தப்படுகிறது.