கணவர் ஜெயிலில் இருக்கும் நிலையில் சினாக் வீடியோ மூலம் பழகிய தோழி ஒருவர் வழக்கறிஞருடன் சேர்ந்து தனது வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். குடும்பங்களின் சீரழிவிற்கு வழிவகுத்த டிக்டாக்கின் வாரிசாக வந்துள்ள சினாக் வீடியோ விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
நடு வீட்டில் நின்று, சரக்கு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்கும் இவர் தான் குடியிருக்கும் வீட்டை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் சினாக் வீடியோ சிங்காரி ராஜவதனி.
புதுச்சேரி மாநிலம் வேல்ராம்பட்டு துலுக்காணத்தம்மன் நகரை சேர்ந்த ராஜவதனி தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு 2 வது கணவருடன் வசித்து வருகின்றார். டிக்டாக்கின் மீது தீரா பிரியம் கொண்ட ராஜவதனி அது தடை செய்யப்பட்ட பின்னர் அதன் வழித்தோன்றலான ஸ்னாக் வீடியோ என்ற செயலில் ஆட்டம் போட ஆரம்பித்தார்
டிக்டாக்கின் சித்தியான ஸ்னாக் வீடியோவில் 80ஸ் கிட்டுகளுக்கு பிடித்த காதல் பாடல்களுக்கு ராஜவதனி, தனது நடன அசைவுகளால் நவரசத்தையும் பொழிந்ததால் சொக்கிபோன மேகவாணி என்பவர் அவரது ரசிகையாக அறிமுகமாகி தோழியானார்.
மேகவாணியின் கணவர் ஒரிசா ஜெயிலில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனிமையில் இருந்த அவர் ராஜவதனியுடன் 3 மாதங்களாக நகையும் சதையுமாக ஒன்றாக சுற்றித்திரிந்ததாக கூறப்படுகின்றது அதனை சில நாட்களிலேயே மேகவாணி திருப்பிக் கேட்டதல் தோழிகளுக்கிடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜவதனி, வழக்கறிஞர் ஒருவருடன் சேர்ந்து தனது வீட்டையும் அபகரிக்க திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார் மேகவாணி
தன்னிடம் ராஜவதனி பண மோசடியில் ஈடுபட்டதாக மேகவாணி போலீசில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் ராஜவதனியை பிடித்து 1 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அண்மையில்
ஊரையே அழைத்து பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடிய ராஜவதனியின் வீட்டுக்குள் புகுந்து மீதிப்பணத்தை கேட்டு மேகவாணி அலப்பறை கச்சேரி வைத்ததாக கூறப்படுகின்றது
இது குறித்த புகாரின் பேரில் மேகவாணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மற்றும் முக நூலில் தன்னை பற்றியும் தனது அண்ணனான வழக்கறிஞர் குறித்தும் மேகவாணி அவதூறு தகவல் பரப்பியதாக குற்றஞ்சாட்டியுள்ள ராஜவதனி, தனது மானத்திற்கு சிறு களங்கம் என்றாலும் தான் உயிரைவிட போவதாக சீரியசாக தெரிவித்தார்
உலகமே உற்று நோக்கும் செல்போன் செயலி ஒன்றில் மூன்றாம் தர பாடல்களுக்கு திறமை காட்டியதோடு, தோழியாக பழகியவரின் நகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ராஜவதனிக்கு முதலியார்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் ரசிகராக இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது இரு பெண்களும் வழக்குகளில் சிக்கி வீதியில் நின்று சத்தமிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
தமிழ் சமூகத்தை சில காலம் சீரழித்த டிக்டாக்கை தடை செய்தாலும் அதே வழியில் சமூகத்தை சீரழிக்க வரிசைகட்டி நிற்கும் சினாக் வீடியோ போன்ற செல்போன் செயலிகளையும் தடை செய்வது காலத்தின் கட்டாயம்.