சுவாமி விவேகானந்தர் காட்டிய அதே வழியில், புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், விவேகானந்தர் சிலையை, காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றிய அவர் இதனை கூறினார்.
இந்த நூற்றாண்டு, மேற்குலகிற்கானதாக இருந்தாலும், அடுத்த நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும் என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் உரையாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார்.
விவேகானந்தரின் கனவை நனவாக்க வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.