ஸ்கார்பியன் ரக ஐந்தாவது நீர்மூழ்கியான ’வாஜிர் ’ கடற்படையில் இணைந்துள்ளது.
மும்பை மசாகோன் கப்பல்கட்டும் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காணொலி வாயிலாக வாகிர் நீர்மூழ்கியை கடற்படையில் இணைத்து வைத்தார்.
கடற்படையை வலுப்படுத்தும் விதமாக 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் ஆர்டர் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மசாகோன் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அதில் முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி, கடந்த 2015 ல் தயாராகி, 2017 ல் கடற்படையில் இணைக்கப்பட்டது. கடலின் மேற்பரப்பிலும், கடலுக்குள்ளும் பயன்படுத்தும் நவீன ஆயுதங்களை கையாளும் திறன் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகளுக்கு உள்ளது.