உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த மேலும் பத்து தொழில்துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து இது தொடர்பான திட்டத்தை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்துள்ளார்.
வேலைவாய்ப்பை உருவாக்குதல், இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்தல், ஆகியவற்றின் அடிப்படையில் உணவுப் பதப்படுத்துதல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பத்து தொழில் துறைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.