இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் இருந்தே, தீவிரவாதிகள் ஏவப்படுவதை, பாகிஸ்தான் அரசே ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது.
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, இந்தியா புகைப்பட ஆதார, ஆவணங்களுடன், குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும், பாகிஸ்தான் ஏற்க மறுத்தது.
இந்நிலையில், சர்வதேச அழுத்தம் காரணமாக கதிகலங்கி போயுள்ள பாகிஸ்தான், தனது மண்ணில் இருந்து தான், பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின், மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள 880 பக்க அறிக்கையில், 11 தீவிரவாதிகளையும் பட்டியலிட்டு, தேடப்படும் தீவிரவாதிகளாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.