வரி பயங்கரவாதம் என்பதில் இருந்து வெளிப்படையான வரி விதிப்பு என்கிற நிலைக்கு இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயக் கட்டடத்தைக் காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், வரி பெறுவது பொதுமக்களுக்குத் துன்புறுத்தலாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
வரிசெலுத்துவோர் அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெற இப்போது ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.
முகமற்ற மேல்முறையீடு, தகராறு தீர்ப்பு வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லாததையும்,
நிறுவன வரி இதுவரை இல்லா வகையில் குறைக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.