டெல்லியில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் இன்னும் 4 முதல் 5 நாள்கள் வரை கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருக்குமென நிபுணர்கள் கணித்திருப்பதாக குறிப்பிட்டார்.
டெல்லியில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதாகவும், இதுவே கொரோனா அதிகரிக்க காரணமெனவும் தெரிவித்த சத்யேந்திர ஜெயின், வேலைக்கு செல்வோரிடையேதான் கொரோனா அதிகம் உறுதியாகி வருவதாகவும் கூறினார்.