மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை, பஞ்சாப் மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனில், சிபிஐ தரப்பு மாநில அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்ட், கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள், சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்த நிலையில், பஞ்சாப் அந்த வரிசையில் 8வது மாநிலமாக இணைந்துள்ளது.