மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் உறுப்பினருமான முகுல் சங்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இதனால் ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டசபையில் காங்கிரசில் 20 எம்.எல்.ஏக்களும், ஆளும் கூட்டணியில் 38 எம்.எல்.ஏக்களும் உள்ளனர், இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.