கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், திருவனந்தபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கடந்த 7-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், கூடுதல் மருத்துவக் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்பவன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.