பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை 3 கட்டங்களாக நடைபெற்றது.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 59 கம்பெனி துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கையை, 38ல் இருந்து 55 ஆக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.
கருத்துக் கணிப்புக்கு ஏற்ப ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா அல்லது நிதிஷ்குமார் ஆட்சியை தக்க வைப்பாரா என்பது நாளை பிற்பகலுக்குள் தெரியவரும்.