15ஆவது நிதிக்குழு அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்கான தனது பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கியது.
என்.கே.சிங்கைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவினர் 2021-2022 முதல் 2025-2026 வரையான 5 நிதியாண்டுகளுக்கான பரிந்துரைகள் அடங்கிய கோப்புகளை இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர்.
வரிச் சீர்திருத்தம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, பேரிடர் மேலாண்மை நிதி ஆகியன குறித்த பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.