சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் என்ற இடத்தில் சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சந்தீப் கோஷ் மற்றும் சந்து கதி ஆகியோர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தி மாவோயிஸ்ட் ஒருவரை சுட்டுக் கொன்றதுடன், ஆயுதங்களையும் கைப்பற்றினர்.