அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரீஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, அவர்களின் மணல் சிற்பங்கள் ஒடிசாவின் பூரி கடற்கரையில் வரையப்பட்டுள்ளன.
இருவரின் முகங்களையும் வரைந்துள்ள மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் "அமெரிக்காவுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த மணற்சிற்பத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.