டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 15 புள்ளி 26 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் மற்றும் காற்று மாசுபாடு அதிமானதால் பெருந்தொற்றின் தாக்கம் அதிகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று வந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.