சீனாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு நடைபெற்றதாகவும், அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா படையினரைக் குவித்ததால் எழுந்த பதற்றத்தைத் தணிக்க ஏப்ரல் மாதம் முதல் வெவ்வேறு நாட்களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன. வெள்ளியன்று சுசுல் என்னுமிடத்தில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான எட்டாம் சுற்றுப் பேச்சு நடைபெற்றது.
அப்போது, எல்லையில் படைவிலக்கம் பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாகவும், ராணுவம், வெளியுறவு அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து பேச்சு நடத்த ஒப்புக்கொண்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெற உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.