இன்று 93வது பிறந்தநாளைக் கொண்டாடும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தது மட்டுமல்லாமல், பாஜகவின் தேசியவாத சித்தாந்தத்தின் விரிவாக்கத்தில் அத்வானி முக்கிய பங்கு வகித்தவர் என்று அவர் ட்விட் செய்துள்ளார்.
அத்வானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், அவருக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்திப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.