போலியான டெபிட், கிரெடிட் அட்டைகளை தயாரித்து அவற்றின் மூலம் பணம் திருடியும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கியும் மோசடி செய்து வந்த 8 பேர் கொண்ட கும்பலை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 63 போலி டெபிட் கார்டுகளும் 13 போலி கிரெடிட் கார்டுளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர 15 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம்,50 லட்சம் ரூபாய் வங்கிப் பணம், 18 போலி ஆதார் அட்டைகள், 30 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், 15 சிம் கார்டுகள், செல்போன்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
போலி ஆவணங்களுடன் 36 வங்கிக் கணக்குகளை தொடங்கிய அந்த குடும்பத்தினர் குறித்து சிட்டி வங்கி புகார் அளித்ததன் பேரில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.