பிரதமர் நரேந்திரமோடி இன்று சூரத் நகரில் இருந்து சவுராஷ்ட்ரா வரையிலான படகு சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இதனால் 317 கிலோ மீட்டர் சாலை மார்க்கமான பயணதூரம் 60 கிலோ மீட்டராக குறையும். குஜராத்தின் கம்பத் வளைவில் இந்த படகு சேவையை மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
கோகா-தஹேஜ் இடையிலான இந்த படகு சேவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், கோகா- ஹசிரா இடையே இது இரண்டாவது நீர் வழித் தடமாகும். கு
ஜராத்தின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள மக்களின் பயணத்திற்கு இந்த கடல்வழி படகுப் போக்குவரத்து உதவும்.