பீகார் மாநிலத்தில், நடப்பு சட்டமன்றத் தேர்தலில், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியே வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.
ரிபப்ளிக் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில், மெகா கூட்டணிக்கு 138 இடங்கள் வரையிலும், நிதிஷ்குமார்- பாஜக கூட்டணிக்கு 117 இடங்கள் வரையிலும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
என்டிடிவி கருத்துக் கணிப்பில், லாலு-காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்கள் வரையிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 120 இடங்களில் வெல்லக் கூடும் என கூறப்பட்டுள்ளது.