நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் மாணாக்கர்கள் பங்கெடுக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ மாற்றக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்தத் தேர்வுகளை திட்டமிட்டதை விட முன்கூட்டியே நடத்தும் வகையில் அட்டவணையை தயாரிக்கும் பணியை சிபிஎஸ்இ தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
சிபிஎஸ்இ-யோடு தொடர்பு கொண்ட ஏராளமான பள்ளிகள், அந்தத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.