பீகாரில் 3ஆவது கட்டமாக இன்று 78 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 11 மணி வரை 19 புள்ளி 77 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
243 இடங்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக அக்டோபர் 28ம் தேதி 71 தொகுதிகளுக்கும், கடந்த 3ம் தேதி 94 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் 16 மாவட்டங்களிலுள்ள 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 3ஆவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
3ஆவது கட்டத் தேர்தலில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் தொடங்கிய 78 தொகுதிகளிலும் காலை இருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
சில வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தரையில் வட்டம் போடப்பட்டு இருந்தது.