பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டின் லாப நட்டக் கணக்கைப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியில் தாக்கல் செய்துள்ளது.
அதில் வங்கியின் மொத்த வருமானம் கடந்த ஆண்டைவிட 2 விழுக்காடு அதிகரித்து ஆறாயிரத்து 834 கோடி ரூபாயாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் 161 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டியதைவிட 20 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.