ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க காவல் துறை சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் அஜ்மீர் குவாஜா சாகிப் தர்கா அருகே பெண் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
திருட்டுக் குற்றத்துக்கு ஆளான அந்தப் பெண்ணை நடுரோட்டில் தலைமுடியைப் பிடித்துத் தரதர வென இழுத்துச் சென்று இளைஞர் ஒருவர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்குப் புகார் வரவில்லை என்ற போதும் விசாரணை நடைபெற்று வருகிறது.