இந்தியாவின் மிகப் பெரிய ஏர்லைன்சான இண்டிகோ,புதிய 150 ஏர்பஸ் ஏ.320 விமானங்களில் பொருத்துவதற்காக சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பிராட்&ஒயிட்னி மற்றும் CFM நிறுவனங்களிடம் இருந்து எஞ்சின்களை வாங்கும் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் விமானப்போக்குவரத்து துறை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், இண்டிகோவின் இந்த கொள்முதல் திட்டம் அந்த துறையினரிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த முறை 280 விமானங்களில் பொருத்துவதற்கான எஞ்சின்களை வாங்க CFM நிறுவனத்துடன் இண்டிகோ சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்து, விமான சேவை துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தது.