கொரோனா பரவலில் இருந்து அமெரிக்காவை காப்பற்ற முடியாமல் டிரம்ப் தோல்வி அடைந்து விட்ட நிலையில், பிரதமர் மோடி கொரோனாவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றி விட்டதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் தர்பாங்காவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்தாததால் அமெரிக்க மக்கள் டிரம்பை தோற்கடித்து விட்டனர் என்றார்.
ஆனால் சரியான நேரத்தில் ஊரடங்கை அறிவித்து 130 கோடி மக்களையும் மோடி காப்பாற்றி விட்டதாக கூறினார்.