கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயின் கூடுதல் தனி செயலாளரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த கடத்தல் வழக்கில் பினராய் விஜயனின் முதன்மை தனி செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரின் கூடுதல் தனி செயலாளர் ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் இன்று காலை 10 மணிக்கு கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.