பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தாபுரின் நிர்வாகப் பொறுப்பை இஸ்லாமிய அமைப்பிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பாகிஸ்தானின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
சீக்கியர் நிர்வாகப் பொறுப்பில் இருந்து கர்த்தார்புர் உள்ளிட்ட குருதுவாராக்களின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாகிஸ்தான் திட்டமிட்டு சீக்கியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.