நேபாளம் சென்றுள்ள ராணுவத் தளபதி நரவனே, அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியை இன்று நேரில் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசலை நீக்க பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட உள்ளது.
நேபாள நாடாளுமன்றம் அங்கீகரித்த வரைபடத்தில் இந்தியாவின் சில எல்லைப் பகுதிகள் சீனாவுக்கு உரியதாக சித்தரிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.