ஒரு அறைக்குள் சாட்சிகள் யாரும் இல்லாத நிலையில் நிகழும் பட்டியிலன மற்றும் பழங்குடியினத்தவரை, அவமதிக்கும் வகையிலான செயல் குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு ஒன்று, நீதிபதி நாகேஷ்வர் ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு நபருக்கான அனைத்து அவமானங்களும் குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் குற்றமாகாது எனவும், பொதுமக்களின் பார்வையின் முன்னிலையில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு நிகழும் அவமானங்களே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றமாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.