தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்ட போதும் பட்டாசு வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கவில்லை.
பல்வேறு மாநிலஅரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுமாறு டெல்லி காற்று மாசு சூழலை கவனத்தில் கொண்டு முதலமைச்சர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய சூழலில் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீள முயற்சிக்கும் பட்டாசு விற்பனையாளர்கள் போதிய விற்பனை ஆகாமல் சோர்வுடன் காணப்படுகின்றனர்.
இந்த ஆண்டு திருவிழாக்களே இல்லாத ஆண்டாக இருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்